10 நாட்களாக.. 100 கி.மீ தூரத்துக்கு டிராபிக் ஜாம்-பெங்களூரை விட பெய்ஜிங் மோசம்பா!

இந்தியாவிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் எங்கு என்று கேட்டால் நிறையப் பேர் பெங்களூரை உதாரணம் காட்டுவார்கள். சென்னையையும் கூட மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகர்களில் ஒன்றாகக் கூறலாம்.
ஆனால் பெங்களூரை விட மோசமான போக்குவரத்து நெரிசலைக் கண்டுள்ளது பெய்ஜிங்-ஜாங்ஜியாகோ நெடுஞ்சாலை.
இந்த நெடுஞ்சாலையில் பல மைல் நீளத்திற்கு வாகனங்கள் தேங்கிக் கிடக்கின்றன. பெய்ஜிங்கில் நடந்து வரும் சாலை அமைப்புப் பணி காரணமாக ஏற்பட்ட நெரிசல் இது. கடந்த பத்து நாட்களாக இந்த நெரிசல் நீடித்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டுனர்கள் வண்டியை விட்டுவிட்டும் போக முடியாமல், வண்டியிலும் உட்கார்ந்திருக்க முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர். டிரைவர்களை மாற்றி மாற்றி கார்களையும் வாகனங்களையும் நகர்த்திக் கொண்டுள்ளனர்.
டிரைவர்கள் தங்கள் வாகனத்திலேயே தூங்கி, வெளியே குழாய்களில் தண்ணீரைப் பிடித்து குளித்து, சீட்டு விளையாடு, லாரிகளுக்கு அடியில் சமைத்து சாப்பிட்டு பொழுதைக் கழித்து வருகின்றனர்.
அடுத்த மாத மத்தி வரை இந்த நெரிசலை சரி செய்ய முடியாது என்கிறார்கள். அவ்வளவு வண்டிகள் தேங்கிக் கிடக்கின்றனவாம். நத்தையை விட மிக மிக மெதுவாக வாகனங்கள் நகர்ந்து வருகின்றனவாம்.
கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த நெரிசல் காணப்படுகிறது. கார்கள், லாரிகள் என சகல வாகனங்களும் மாட்டிக் கொண்டு முழிக்கின்றன. ஒன்றையொன்று இடிப்பது போல வாகனங்கள் நிற்பதால் மிக மிக மெதுவாக வாகனங்களை நகர்த்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டர் அளவுக்குத்தான் வாகனங்கள் நகர முடிகிறதாம். ஆனால் இது இந்த வாரமாம், போன வாரம் இதை விட மோசமாக நகர்ந்தோம் என்கிறார்கள் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்ட வாகனதாரிகள்.
ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கிய இந்த போக்குவரத்து நெரிசல் புதிதல்லவாம். ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு சம்பவம்தானாம். திடீரென 40 சதவீத அளவுக்கு வாகனங்கள் பெருத்துப் போனதுதான் இந்த நெரிசலுக்குக் காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.
மேலும், மங்கோலியாவில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து இப்பகுதியில் பெருமளவில் அதிகரித்து விட்டதும் போக்குவரத்து நெரிசல் இப்படி மாறிப் போனதற்குக் காரணம் என்கிறார்கள்.
இப்ப சொல்லுங்க, பெங்களூர் சொர்க்கம்தானே...
பெய்ஜிங் டிராபிக் ஜாம் குறித்த மேலும் படம்-விவரங்களுக்கு..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications