செவ்வாயிலிருந்து மொபைல் போன் வழியாக பரவும் கதிர்வீச்சு-கலக்கும் வதந்திகள்!

மத்தியப் பிரதேசதத்தின் பல மாவட்டங்களிலும் இந்த வதந்தி பரவி மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
இதுதொடர்பாக வரும் எஸ்.எம்.எஸ். தகவலில், 7888308001, 93160481521, 9876266211, 9888854137, 9876715587 என்ற எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்காதீர்கள். இவை சிவப்பு நிறத்தில் இருக்கும். இவற்றை அட்டென்ட் செய்தால் உங்களுக்கு மூளையில் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் நேரிடும். இதுவரை 27 பேர் இதுபோல இறந்துள்ளனர். இதுதொடர்பான செய்திகளுக்கு டிடி நியூஸ் மற்றும் சஹாரா சமய் ஆகிய தொலைக்காட்சி செய்திகளைப் பாருங்கள். உங்களது நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இதைப் பார்த்து பலரும் பீதியடைந்து சம்பந்தம் இல்லாத எண்களிலிருந்து அழைப்பு வந்தாமல் போனையே எடுக்காமல் தவிர்க்கிறார்களாம்.
அதேபோல விண்ணிலிருந்து காஸ்மிக் கதிர்கள் பரவி வருவதாக இன்னொரு வதந்தி கிளம்பி மத்தியப் பிரதேச மக்களை மகா குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை உறுதி செய்து கொள்ள நாசா, பிபிசி நியூஸ் சானலைப் பார்க்குமாறு அந்த பயமுறுத்தல் எஸ்எம்எஸ் கூறுகிறது.












Click it and Unblock the Notifications