விஜயகாந்த்துடன் இளங்கோவன் சந்திப்பு: 'நல்ல தலைவர்' என புகழாரம்

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்வதை எதிர்த்து வருகிறார் இளங்கோவன். திமுகவை மிகக் கடுமையான விமர்சித்து வரும் அவருக்கு நீண்ட அமைதிக்குப் பின் நேற்று முன் தினம் தான் காங்கிரஸ் தலைமை மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது. மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து வரும் விஜய்காந்தை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் இளங்கோவன்.
இலங்கை தமிழர் பிரச்சனை தீரும்வரை பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்று அறிவித்திருந்த விஜய்காந்த், அரசியலுக்கு வர முடிவு செய்த பின் முதல் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகிறார்.
இன்று அவரது பிறந்த நாளையொட்டி தேமுதிக சார்பில் மாநிலம் முழுவதும பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் கட்சி தலைமை அலுவலத்தில் தனது பிறந்தநாளை விஜயகாந்த் கொண்டாடினார். முக்கிய பிரமுகர்கள் அவரை நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் திடீரென பூங்கொத்துடன் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து விஜயகாந்துக்கு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது அவருக்கு பொன்னாடையும் போர்த்தினார்.
அப்போது விஜயகாந்த் சிரித்துக் கொண்டே, ''இன்று இதுதான் பத்திரிகைகளுக்கு முக்கியச் செய்தியாக இருக்கப் போகிறது'' என்று கூற, பதிலுக்கு இளங்கோவன் '"இது யார் யாருக்கெல்லாம் கோபத்தை உண்டாக்கப் போகுதோ""என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், விஜயகாந்த் நல்ல தலைவர். அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லாட்சி தருவார் என்றார்.
முன்னதாக விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டினார்.
விஜயகாந்துக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், நடிகர்கள் முரளி, எஸ்.வி.சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் ராம கிருஷ்ணன், மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications