புதிய பொறியியல் கல்லூரிகள்: அனுமதி கூடாது-பொன்முடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தரக்கூடாது என அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இத் தகவலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போது அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

அவற்றை ஒழுங்குமுறைபடுத்த வசதியாக, அடுத்த ஆண்டு முதல் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் 1.2 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். முதல் பட்டதாரி பிரிவின் கீழ் 75,590 மாணவர்களும், கிராமப்புற மாணவர்கள் ஒதுக்கீட்டின் கீழ் 76,076 பேரும் சேர்ந்துள்ளனர்,

கல்லூரிகளில் இன்னும் 8,192 இடங்கள் காலியாக உள்ளன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+