சோமாலிய ஹோட்டலில் தற்கொலைப்படை தாக்குதல்: எம்.பி.க்கள் உள்பட 32 பேர் பலி
மொகாதிஷு: சோமாலிய நாட்டின் தலைநகரான மொகாதிஷுவில உள்ள ஹோட்டல் ஒன்றில் புகுந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 32 பேர் பலியானார்கள்.
சோமாலியாவில் மேலை நாடுகளின் ஆதரவுடன் கூட்டாட்சி நடைபெற்று வருகிறது. அல் கொய்தா'விற்கு ஆதரவளிக்கும் ஷெகாப் என்ற தீவிரவாத அமைப்பு சோமாலியாவில் அடிக்கடி அதிரடி தாக்குதகளை நடத்தி வருகின்றது.
சோமாலிய நாட்டின் தலைநகர் மொகாதிஷுவில் பிரபலமான மோனா' ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலுக்குள் ஷிகாப் இயக்கத்தைச் சேர்ந்த 2 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ராணுவ உடையில் திடீரென உள்ளே நுழைந்தனர். அங்கு உயர் அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் அதிக அளவில் தங்குவார்கள்.
தீவிரவாதிகள் இருவரும் வெடிகுண்டுகளை தங்கள் ஆடைகளில் பொருத்தியிருந்தனர். அவர்கள் ஹோட்டலில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர் அங்கு விரைந்து வந்து ஹோட்டலை சுற்றி வளைத்தனர். இதற்கிடையே அந்த தீவிரவாதிகள் தங்கள் ஆடைகளில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி இறந்தனர்.
இந்த தாக்குதலில் ஹோட்டலில் தங்கி இருந்த 32 பேர் பலியானார்கள். அவர்களில் 6 முதல் 15 பேர் வரை சோமாலிய பாராளுமன்ற உறுப்பினர்களாக (எம்.பி.க்கள்) இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலில் உயர் அதிகாரிகள் பலரும் பலியாகி உள்ளனர். இறந்தவர்களில் சுமார் 20 பேர் அந்த ஹோட்டலில் தங்கி இருந்த அப்பாவி பொது மக்கள் ஆவர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications