காங். விசிட்டிங் கார்டுகளில் சோனியா, ராகுல் படங்களுக்கு மட்டுமே அனுமதி
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது விசிட்டிங் கார்டுகளில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரது படங்களைத் தவிர வேறு யாருடைய படங்களையும் போடக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்கு டெல்லியில் பயிற்சி முகாம் நடந்தது. அதை தொடர்ந்து பாராளுமன்ற தொகுதி வாரியாக பயிற்சி முகாம்கள் நடந்து வருகிறது.
ஆனால் இந்த முகாம்களுக்கு பலரும் வராமல் டிமிக்கி அடித்து விட்டனராம். இதனால் முகாம்கள் தோல்வியைத் தழுவியுள்ளன.
இந்த நிலையில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர் ஆகிய 8 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் சென்னை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
அகில இந்திய பொது செயலாளர் கிரண்குமார் ரெட்டி, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பயிற்சி முகாம்களிலும், தொகுதி ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்காத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக யுவராஜா கூறினார்.
அதை விட முக்கியமாக இந்த முகாமின்போது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் விசிட்டிங் கார்டுகளில் சோனியா, ராகுல் தவிர மற்றவர்களின் படங்களை போடக்கூடாது என்று கிரண்குமார் ரெட்டி எச்சரித்தாராம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. இவர்களது படங்களை போடலாம். மற்றவர்களின் படங்களை போட வேண்டாம் என்பதில் தவறில்லை. ஆனால் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம், கொண்டு வருவோம் என வாய் கிழிய முழங்கும் காங்கிரஸார், அவரது படத்தைக் கூட தங்களது விசிட்டிங் கார்டில் போட அனுமதி இல்லாவிட்டால் எப்படி என்கிறார்கள் பழுத்த காங்கிரஸார் வேதனையுடன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications