கோவிலில் கிடைத்த 27 தங்க காசுகளுடன் கும்பல் மாயம்
விருத்தாச்சலம்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கோவிலில் கிடைத்த 27 தங்கக் காசுகளுடன் மாயமானவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே அரசக்குழியை அடுத்த ஊத்தங்கால் அகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்த சீரமைப்பு பணியின்போது தங்க புதையல் கிடைத்தது.
பணியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீகாஞ்சி கிராமத்தை சேர்ந்த முனுசாமி, சஞ்சீவி, ராமு ஆகியோர் 46 தங்க காசுகளை எடுத்தனர்.
அதனை பங்குபோட்டுக் கொண்ட அவர்கள் திடீரென தலைமறைவானார்கள்.
காண்டிராக்டர் துரை தங்க காசில் பங்கு வேண்டும் என்று கேட்டு மிரட்டியதால் முனுசாமி தங்க காசுகளுடன் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் இருந்து 19 தங்க காசுகள் மீட்கப்பட்டது. பின்னர் அந்த தங்கக் காசுகளை போலீசார் திருக்கோவிலூர் உதவி கலெக்டர் பிருந்தாவிடம் ஒப்படைத்தார்.
இதற்கு ஊத்தங்கால் அகரம் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவிலில் கிடைத்த தங்க காசு புதையலை விருத்தாசலம் உதவி கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் விருத்தாசலம் தாசில்தாரிடம் முறையிட்டுள்ளனர்.
மேலும் கோவிலில் கிடைத்த 46 தங்க காசுகளில் 19 தங்க காசுகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. 27 தங்கக் காசுகளுடன் மாயமான சஞ்சீவி, ராமு ஆகியோரை பிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கத்திலும் மக்கள் உள்ளனர்.
இதற்கிடையே கோவிலில் மேலும் பல தங்ககாசு புதையல் இருக்கலாம் என்று அந்த கிராம மக்கள் மனதில் எண்ணம் தோன்றி உள்ளது. இதனால் ஊத்தங்கால் அகரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் கோவிலுக்கு வந்து பார்த்து செல்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications