என்னைக் கொல்லை சிபிஐயை ஏவி விட்டுள்ளது காங்கிரஸ்-நரேந்திர மோடி புகார்

அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
எனக்கு எதிராக அரசியல் ரீதியாக போராட முடியாத காங்கிரஸ் தற்போது சிபிஐ மூலம் என்னை பழிதீர்க்கப் பார்க்கிறது. என்னை கொலை செய்ய சிபிஐயை ஏவி விட்டுள்ளது,இதற்கான உத்தரவை சிபிஐக்கு அது வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட காங்கிரஸின் கூலிப்படையாக மாறியுள்ளது சிபிஐ.
என்னைக் கொல்ல வேண்டும், குஜராத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரஸின் திட்டம். இதைத்தான் தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருகிறது சிபிஐ என்று கூறியுள்ளார் மோடி.
பயம் வந்து விட்டது மோடிக்கு-காங்கிரஸ்:
ஆனால் இதை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், மோடி பயப்படுகிறார், விரக்தியில் உள்ளார்.
அவரது வலதுகரமான அமீத் ஷா சிபிஐயிடம் சிக்கியிருப்பதால் பெரும் விரக்தியில் உள்ளார் மோடி. அவர் தப்ப முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை. அவரது ஆதரவாளர்கள் பலரும் சிபிஐ வலையில் சிக்குவது உறுதி.
இதனால் பயந்து போயிருக்கிறார் மோடி. அதனால்தான் இப்படிப் பேசுகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications