ஸ்ரீரங்கம் கோவிலில் ஜெயலலிதா ரூ.2.10 லட்சம் காணிக்கை
திருச்சி: மிகக் குறுகிய காலத்தில் திருச்சி 2வது முறையாக வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.
தனி விமானம் மூலம் தோழி சசிகலா, பெண் உதவியாருடன் திருச்சிக்கு நேற்று மதியம் 2.35 மணிக்கு வந்த ஜெயலலிதா கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்றார்.
பகல் 1.30 மணி முதல் 3 மணிவரை ராகு காலம் என்பதால் 3 மணி வரை கும்பகோணத்தான் சாலையில் காரிலேயே 15 நிமிடம் காத்திருந்தார்.
3.05 மணிக்கு ரெங்கா, ரெங்கா கோபுரம் வழியாக உள்ள வந்த ஜெயலலிதாவை கோவில் நிர்வாகத்தினர் மாலை மரியாதையுடன் வரவேற்றனர்.
பின்னர் கார்த்திகை கோபுரம் வழியாக சென்று, கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்துவுட்டு மூலவர் சன்னதிக்குச் சென்றார்.
அங்கிருந்த உண்டியலில் காணிக்கையாக 100 ரூபாய் நோட்டுளின் 21 கட்டுக்களை (ரூ.2.10 லட்சம்) ஜெயலலிதா செலுத்தினார்.
அங்கு ஜெயலலிதாவுக்கு பட்டு வஸ்திரமும், தாயார்-பெருமாள் படமும் வழங்கப்பட்டன.
அப்போது திருப்பாவையின் 27வது பாடலான வாழ்த்துப் பாடலை பாடி, பட்டர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தினர்.
பின்னர் தாயார் சன்னதியில் ஜெயலலிதா தரிசனம் செய்தார். அங்கிருந்து நந்தவனம் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஜெயலலிதா தரிசனம் செய்தார்.
கோவிலில் சுமார் இரண்டரை மணி நேரம் தரிசனம் செய்த ஜெயலலிதா மாலை 6.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்ய
கோவிலில் நிருபர்கள் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க முயன்றபோத, நான் தனிப்பட்ட முறையிலான பயணம் வந்துள்ளேன். இதனால் பேட்டியளிக்க விரும்பவில்லை என்றார்.
ஜெயலலிதாவின் வருகையைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications