தமிழகத்தை 6 அதிகார மையங்கள் ஆட்சி செய்து வருகின்றன: வைகோ
நாமக்கல்: தமிழகத்தை 6 அதிகார மையங்கள் ஆட்சி செய்து வருகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் கொடி பயணத்தில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றி வைத்து அவர் பேசுகையில்,
தமிழகத்தில் இயற்கை வளம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. மணல் கொள்ளையால் நதி வளம் குறைந்து வருகிறது. கிரானைட் கற்களுக்காக மலைக் குன்றுகள் சுரண்டப்பட்டு வருகின்றன.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற யானை மலையை பெயர்த்து எடுக்கவும் டெண்டர் விடப்பட்டது. மக்கள் எதிர்ப்பு காரணமாகவும், மதிமுக போராடும் என அறிவித்ததைத் தொடர்ந்தும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தை 6 அதிகார மையங்கள் ஆட்சி செய்து வருகின்றன. முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என அனைத்து நதிகளையும் அண்டை மாநிலங்கள் அபகரிக்க ஆங்காங்கே அணை கட்ட துவங்கியுள்ளன.
இவற்றை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடுத்த நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்கிறது தமிழக அரசு.
முதல்வர் கருணாநிதி முனைப்புடன் செயல்பட்டிருந்தால் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கையில் போர் நடைபெறாமல் செய்திருக்க முடியும். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், ஆட்சி பறிபோகும் என்ற காரணத்தினாலேயே மத்திய அரசின் போர் ஒத்துழைப்புக்கு திமுக அரசும் ஆதரவாக இருந்துவிட்டது.
அதிமுக கூட்டம் நடத்தும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கூடுவதை அறிந்து அதிமுக கூட்டம் நடத்திய இடங்களிலேயே திமுக பொதுக் கூட்டத்தையும் தமிழக முதல்வர் நடத்தி வருகிறார். இது அவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது.
அதிமுகவுக்கு பின்னால் செல்வதே திமுக பின் தங்கியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எஸ்எம்எஸ் அனுப்பிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications