பஸ் ஊழியர்கள் மீது தாக்குதல்-திடீர் ஸ்டிரைக்-பொதுமக்கள் கடும் பாதிப்பு
சென்னை: போக்குவரத்துக் கழக டிரைவரை ஒரு கும்பல் தாக்கியதைத் தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் இரவில் பஸ்களை தாறுமாறாக நிறுத்தி பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால் பொதுமக்களும், பயணிகளும் கடும் பாதிப்பை சந்தித்தனர்.
சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இரவுப்பணிக்காக ஒரு டிரைவர் நேற்று தங்கியிருந்தார். நேற்றிரவு 10 மணி அளவில் அவர், சாப்பிடுவதற்காக சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு விட்டு புறப்படும் போது, அங்கே வந்த ஒரு கும்பலைச் சேர்ந்த 5 பேருக்கும், அவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், மாநகரப் போக்குவரத்துக் கழக டிரைவரை சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயம் அடைந்த அந்த ஊழியர், பணிமனைக்கு சென்று தான் தாக்கப்பட்டதை கூறினார்.
இதைத் தொடர்ந்து, அங்கிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், சின்னமலையில் இரவு 10.45 மணி அளவில் சாலையில் அமர்ந்து போக்குவரத்தை மறித்தார்கள். சக ஊழியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்கள். இதனால், அண்ணாசாலையில் வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த தகவலை அறிந்து மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்களும் சில இடங்களில் நிறுத்தப்பட்டது. இதனால், அண்ணாசாலையில், சின்னமலையில் இருந்து தேனாம்பேட்டை வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. இந்த போராட்டம் சுமார் 12 மணி வரை நீடித்தது. பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
எந்த வாகனமும் செல்ல முடியாமல் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பட்ட அவதி மிகக் கடுமையாக இருந்தது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications