நிதிஷ்குமாருக்கு நல்ல சீட்-பழுதடைந்த சீட் கிடைத்ததால் விமானப் பணிப்பெண்ணுடன் மோதிய லாலு
டெல்லி: டெல்லியிலிருந்து பாட்னா செல்வதற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறிய முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தனது இருக்கை பழுதடைந்திருந்ததாலும், பின்னாடி இருக்கையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குறட்டைவிட்டுதூங்கிக் கொண்டிருந்ததாலும் ஆத்திரமடைந்து விமானப் பணிப்பெண்ணுடன் சண்டைக்குப் போய் விட்டார்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பறப்படத் தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் வேகமாக வந்து விமானத்தில் ஏறினார்.
அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விமானப்பணிப் பெண் காட்டினார். ஆனால் அது பழுதடைந்திருந்தது. இதனால் எரிச்சலடைந்தார் லாலு. அது போதாதென்று பின் இருக்கையைப் பார்த்த லாலு, அங்கு முதல்வர் நிதீஷ் குமார் ஹாயாக தூங்கிக் கொண்டிருந்ததால் மேலும் கோபமடைந்தார்.
எப்படி எனக்கு இப்படி ஒரு சீட்டைக் கொடுக்கலாம், புகார் கொடுக்கட்டா என்று கூறி தனது பாணியில் கத்தினார். இதைப் பார்த்த ஏர் ஹோஸ்டஸ் பயந்து போய் விட்டார். பின்னர் இருக்கை சரி செய்யப்பட்டு அதில் லாலுவை அமர வைத்தனர்.
லாலுவின் இந்த லடாய் காரணமாக கிட்டத்தட்ட அரை மணி நேரம் தாமதமானது விமானம் புறப்பட.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications