புதிய தமிழகம்-மள்ளர் இயக்கத்தினர் மோதல்: 7 பேர் கைது
தென்காசி: தென்காசி அருகே போஸ்டர் ஓட்டுவதி்ல் ஏற்பட்ட தகராறில் புதிய தமிழகம்- மள்ளர் இயக்கத்தினர் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் சின்னகுட்டி மகன் ஆறுமுகம். இவரது வீட்டு சுவற்றில் சில நாட்களுக்கு முன் மள்ளர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தனது நிறுவன தலைவர் சுப. அண்ணாமலையை வரவேற்று போஸ்டர் ஓட்டினர்.
இதை புதிய தமிழகம் கட்சியினர் எதிர்த்தனர். அவர்கள் போஸ்டர் மீது சாணத்தை வீசினர்.
இதை ஆறுமுகத்தின் தாய் பண்டாரத்தி கண்டித்தார். இதையடுத்து பண்டாரத்தியை அவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் தென்காசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீசி தாக்கிக் கொண்டனர்.
சம்பவம் அறிந்த வடகரை சப்-இன்ஸ்பெக்டர் சவுகத் அலிகான் விசாரணை நடத்தி புதிய தமிழகத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துராஜ், பால்துரை, பண்டாரம், மள்ளர் இயக்கத்தை சேர்ந்த மாரியப்பன், சாமி, அவரது தம்பி ஆறுமுகம் ஆகியோரையும் கைது செய்தா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications