அதிமுக, திமுக பாணியில் கோவையில் பொதுக் கூட்டம் போடும் காங்.

கடந்த நான்கு ஆண்டு காலமாக பெரிய அளவில் போராட்டம் எதிலும் பங்கேற்காமல் கொடநாட்டில் ஓய்வு, சென்னையில் ஓய்வு என இருந்து வந்த ஜெயலலிதா சமீபகாலமாக பொதுக் கூட்டங்களைப் போட்டு கூட்டத்தைக் கூட்டி வருகிறார்.
இதுபோல அவர் கோவையில் போட்ட கூட்டத்திற்கு பெருமளவு கூட்டம் கூடியதால் அதிமுகவினர் அதை திருப்புமுனையாக கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து கோவையில் திமுகவும் அதே இடத்தில் போட்டிக் கூட்டத்தைப் போட்டு கூட்டத்தைக் காட்டியது.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸும் கோவையில் பொதுக் கூட்டம் போடப் போகிறது. பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் பேசப் போகிறார்கள்.
முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்ரமணியத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு நாணயத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிடுகிறது. இதற்கான விழா கோவையில் இன்று நடைபெறுகிறது.
கோவை அவினாசி சாலையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் ஆடிட்டோரியத்தில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவுக்குப் பின், கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் பிரணாபும், சிதம்பரமும் பேசவுள்ளனராம். இதில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளுக்காக இன்று மாலை 4 மணியளவில் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவே டெல்லி திரும்புகிறார். அவர் சென்னை வந்து முதல்வரை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி கூட்டங்களைப் போட்டு தங்களது பலத்தை காட்டிக் கொண்டும், பரீட்சித்துப் பார்த்துக் கொண்டும் இருப்பதால், காங்கிரஸும் தனது பலத்தைக் கூட்ட பொதுக் கூட்டத்தில் இறங்கியிருப்பதாக கருதப்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications