15வது நாளாக தொடரும் விசைப் படகு மீனவர் போராட்டம்-ரூ. 16 கோடி இழப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடியில் விசைப் படகு மீனவர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் 15வது நாளை எட்டியுள்ளது. இதனால் ரூ. 16 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகத்தில் சுமார் 247 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிலாளர்கள் பங்கு தொகையை 35 சதவிதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வேலை நிறுத்த போரட்டம் நடத்தினர். இது தொடர்பாக தொழிலாளர்கள், உரிமையாளர்கள் இடையே பலகட்ட பேச்சு வார்த்தை நடந்தன. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பிரகாஷ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதி்ல் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று படகுகள் கடலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசைப்படகு உரிமையாளர்கள் பலர் கூடுதல் ஊக்கதொகை கொடுப்பதாக ஏற்பட்ட உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நேற்றும் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று 15வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீன்பிடி தொழிலில் 16 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications