அதிமுக தலைமையில் குழு அமைத்து அரசு கேபிள் டிவி குறித்து விசாரிக்க வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனம் அடக்கமாக செயல்படுகிறதா அல்லது அடக்கம் செய்யப்பட்டு விட்டதா என்பதை அதிமுக தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அரசு கேபிள் டி.வி. நிறுவனம் இப்போது அடக்கமாக செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி கூறுகிறார்.
ரூ.400 கோடி மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் அடக்கமாக உள்ளதா? அல்லது அடக்கம் செய்யப்பட்டு விட்டதா? என்பதைக் கண்டறிய பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
'எல்நெட்' நிறுவனம் மூலம் ரூ.700 கோடியில் உருவாக்கப்பட்ட 'இடிஎல்' நிறுவனம் எங்கு சென்றது என்பதைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். வீடற்ற ஏழை மக்களுக்கு 3 சென்ட் வீட்டுமனை, நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் மூலமே திமுக தலைமையிலான கூட்டணி கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.
இந்த வாக்குறுதிகளை வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் நிறைவேற்றக் கோரியும், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உடல் நலனை பாதிக்கக் கூடிய டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக் கோரியும் கட்சியின் சார்பில் செப்டம்பர் 6-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மும்முனை போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications