சட்டசபைத் தேர்தலை சந்திக்க சிபிஎம் தயார்-ஜி.ராமகிருஷ்ணன்
கோவை: தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயார் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவையில் நடைபயண இயக்கத்தை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தற்போதைக்கு தேர்தல் தொடர்பாக எந்தக் கட்சியுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவில்லை. கூட்டணி தொடர்பாகவும் ஆலோசிக்கவில்லை. மக்கள் பிரச்சினைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம்.
திருப்பூர் எம்.எல்.ஏ கோவிந்தசாமி கட்சியை விட்டுப் போனதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் போல வலுவாகவே உள்ளது.
எங்களது நடைபயண இயக்கம் செப்டம்பர் 4ம் தேதி பிரமாண்ட கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. அந்தக் கூட்டத்தில் சீதாரம் எச்சூரி பங்கேற்கிறார். செப்டம்பர் 5ம் தேதி கட்சியின் கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்றார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications