தமிழக சட்ட மேலவைத் தேர்தல்-அரசியல் கட்சிகளுக்கு ஒரு வாரம் அவகாசம்
சென்னை: தமிழக சட்ட மேலவைக்கான தேர்தல் குறித்து ஒரு வாரத்திற்குள் கருத்து தெரிவிக்குமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமையவுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்ததைத் தொடர்ந்து அதற்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
முதல் கட்டமாக 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதிகளை தீர்மானித்துள்ளது. மேலவையில் மொத்தம் 78 தொகுதிகள் இடம்பெறுகின்றன. இதில் எம்.எல்.ஏக்கள் மூலம் 26 பேர் தேர்வு செய்யப்படுவர். உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் 26 பேர் உறுப்பினர்களாவர். ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகள் 7 ஆகும். ஆளுநர் 12 பேரை நியமிப்பார்.
தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் பெரம்பலூர்-கடலூர், கரூர்-நாமக்கல், நீலகிரி-கோவை, தேனி-திண்டுக்கல், அரியலூர்-திருச்சி, திருவாரூர்-நாகை, ராமநாதபுரம்-சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு 7 தொகுதிகளாக கருதப்படும். மற்ற மாவட்டங்கள் 25 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
வரைவுப் பட்டியலை தயார் செய்துள்ள தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அரசியல் கட்சிகளின் கருத்தை அறிய நேற்று கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தது.
இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் வினோத் சுர்ஸி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையம் சார்பில் பங்கேற்றனர்.
திமுக, காங்கிரஸ் சார்பில் பங்கேற்றவர்கள் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதேசமயம், அதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக உள்ளிட்டவை தேர்தலை நடத்துவதில் அவசரம் காட்டக் கூடாது என்று வலியுறுத்தினர்.
தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது.
அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்ட பின்னர் இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் எழுத்துப் பூர்வமாக அரசியல் கட்சியினர் தங்களது கருத்தினைத் தெரிவிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உத்தரவிட்டார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications