தூத்துக்குடி பெண் விஞ்ஞானிக்கு ரூ.5.25 லட்சம் நிதியுதவி
தூத்துக்குடி: வாழைத்தண்டில் இருந்து பஞ்சு பிரித்தெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தூத்துக்குடி பெண் விஞ்ஞானி லலிதா முருகனுக்கு அதை நவீனப்படுத்த ரூ.5.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்தவர் லலிதா முருகன். விஞ்ஞானியான இவர் கடந்த 2007ம் ஆண்டு வாழைத்தண்டில் இருந்து பஞ்சினை தனியாக பிரித்தெடுக்க ஒரு இயந்திரத்தை வடிவமைத்தார்.
இந்த இயந்திரம் மூலம் பஞ்சு நீக்கப்பட்ட வாழை தண்டை பயன்படுத்தி பல விதமான உணவுகளை எளிதாக தயாரிக்கலாம். மேலும் லலிதா முருகன் இதை பயன்படுத்தி வாழைத்தண்டு மி்ட்டாய், சாக்லெட் போன்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்தார்.
இந்த சாக்லெட் 48 வகை மருத்துவ குணம் கொண்டது. இவரது கண்டுபிடிப்புக்காக கடந்த 2007ம் ஆண்டு அப்போதைய ஜானதிபதி அப்துல் கலாமிடம் இருந்து விருதும், பாராட்டு சான்றும் பெற்றுள்ளார்.
இந்த கண்டுபிடிப்பை இந்திய அறிவியல் துறை அமைச்சகமும், நபார்டு வங்கியும் அங்கீகரித்துள்ளன. இந்த இயந்திரத்தை நவீனப்படுத்த நபார்டு வங்கி ரூ.2.50 லட்சமும், டெல்லி அறிவியல் கழகம் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் ரூ.2.75 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளது.
இந்த நிதியை கொண்டு லலிதா முருகன் தான் கண்டுபிடித்துள்ள இயந்திரத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். விஞ்ஞானி லலிதாவின் கணவர் முருகனும் ஒரு கண்டுபிடிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications