விரைவில் வருகிறது விர்சுவல் வேலைவாய்ப்பு அலுவலகம்: இனி கியூ வேண்டாம்
சென்னை: விரைவில் விர்ச்சுவல் வேலைவாய்ப்பகம் வரப் போகிறது. எனவே கியூ வரிசையில் நிற்கும் தொல்லை இனி இருக்கப் போவதில்லை.
சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1998-ம் ஆண்டு ஆனந்த் செல்வன் என்பவர் பதிவு செய்தார். இன்னும் அவருக்கு வேலை கிடைத்தபாடில்லை. கடந்த 12 ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தனது சொந்த ஊரான திருச்சியில் இருந்து சென்னைக்கு 5 முறை சென்றுள்ளார்.
இது போன்ற கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிலாளர் துறை விர்சுவல் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த இணையதள வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கியதும் இனி பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலங்களுக்கு முன் கால் கடுக்க நிற்கத் தேவையில்லை. ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து சமர்பித்தால் போதும்.
இது குறித்து எல்காட் தலைவர் சந்தோஷ் பாபு கூறியதாவது,
பதிவு செய்ய விரும்புவோர் எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் பதிவு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடிவுகள் வந்தவுடன் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் முன் மாணவர்கள் நீண்ட வரிசையில் நிற்பது வழக்கம். ஆனால் இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை.
ஏற்கனவே விண்ணப்பித்துள்ள சுமார் 60 லட்சம் பேரின் விவரங்கள் கணிணியில் பதிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டம் வாரியாக வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் பற்றிய தகவல் தொகுப்பு உருவாக்கப்படும்.
இந்த தளத்தில் பயன்படுத்தப்படும் 2 விண்ணப்ப சாப்ட்வேர்களில் ஒன்று பதிவு செய்த தனியார் கம்பெனிகளுக்கு இந்த தகவல் தொகுப்பை பார்க்க அனுமதி அளிக்கும். இந்த தளத்தில் தகுதியான எலக்ட்ரிஷியனோ அல்லது தச்சரோ விண்ணப்பிக்கக்கூடும். அனைத்து தகவல்களும் பின் கோடு மூலம் ஒழுங்குபடுத்துவதால் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்வது சுலபம்.
இதன் மூலம் மக்கள் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குப் போக வேண்டாம், வேலையே அவர்களைத் தேடி வரும். இது வரை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறவனங்களுக்கு மட்டும் தான் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலைமை இனி மாறவுள்ளது என்று அவர் கூறினார்.
அனைத்து தகவல்களும் மாநிலத் தகவல் மையத்தில் வைக்கப்படும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications