தீபாவளிக்குள் சவரன் ரூ 16000-ஐத் தொடும் அபாயம்!

தங்கம் விலை எக்கச்சக்கமாய் ஏறுவதும், பின்னர் லேசாகக் குறைவதும், அடுத்த சில தினங்களில் மீண்டும் தாறுமாறாக உயர்வதுமான மோசடி கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கிறது.
இந்தப் போக்கு இனி வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றும், ஒரு சவரன் தங்கத்தின் விலை தீபாவளிக்குள் ரூ 16000 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
மும்பை சந்தையில் இப்போது 10 கிராம் தங்கம் (99.5 சதவீதம்) 18,910-க்கும், 100 சதவீத சுத்த தங்கம் 19,000-க்கும் விற்பனையாகிறது.
வரும் தீபாவளிக்கும் 10 கிராம் தங்கம் 20 ஆயிரத்தை தாண்டும் என்று 'தி பாம்பே புல்லியன் அசோசியேஷன்ஸ்' சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் தங்கம் விற்பனை அதிகரிக்கும். இதனால், தங்கத்தின் தேவை அதிகமாகி விலை உயரும் என்று அவர் மேலும் கூறினார்.
சென்னை சந்தையில் இப்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு (8 கிராம்) 14,128-க்கும், ஒரு கிராம் 1,766-க்கும் விற்பனையாகிறது.
தீபாவளி பண்டிகையின்போது பவுன் 16,000-ஐ எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications