'பெர்த் சர்டிபிகேட்'டை நெற்றியில் ஒட்டிக் கொண்டு திரிய முடியாது-ஒபாமா டென்ஷன்

ஒபாமாவுக்கு எதிரான அல்லது எதிர்மறையான கருத்துக்கள் அமெரிக்காவில் படு வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றன. அவரது செல்வாக்கு வேகமாக சரிகிறது என்று அவ்வப்போது சர்வேக்கை எடுத்து விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ஒபாமாவை ஒரு முஸ்லீம் என்று ஐந்தில் ஒரு அமெரிக்கர் நினைப்பதாக சமீபத்தில் ஒரு சர்வே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வெள்ளை மாளிகை ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டது. அதில் ஒபாமா ஒரு கிறிஸ்தவர். மேலும், அதிபரின் மத நம்பிக்கை என்பது பொது விவாதத்திற்கு உட்பட்டதல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒபாமாவே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சர்வே குறித்து நான் கவலைப்படவில்லை. உண்மை எதுவோ அதுவே உண்மையாகும்.
இப்போதைய மீடியாக்களில் தவறான, அவதூறான செய்திகள் நிறைய வருகின்றன. அவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
என்னைப் பற்றி இதுபோல நிறைய வதந்திகள். ஆனால் அவை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. அவற்றுக்குப் பின்னால் ஓடுவதை விட செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன.
நான் எங்கு பிறந்தேன் என்பதை எல்லோருக்கும் தெரிவிப்பதற்காக எனது நெற்றியில் பெர்த் சர்டிபிகேட்டை ஒட்டிக் கொண்டு போய் வர முடியாது. இதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ஒபாமா.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications