ஷேவாக்குக்கு எதிராக நோபால்-இலங்கை அணி ஸ்பாட் பிக்ஸிங் செய்ததா?

Subscribe to Oneindia Tamil

Suraj Rantiv
சென்னை: பாகிஸ்தான் அணி ஸ்பாட் பிக்ஸிங் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், சமீபத்தில் இலங்கையின் தம்புல்லாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கையும் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடரின்போது இந்தியா, இலங்கை அணிகள் தங்களது சுற்றுப் போட்டியில் தம்புல்லாவில் மோதின. அப்போது ஷேவாக் 99 ரன்கள் எடுத்திருந்தபோது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார்.

பின்னர் இதற்காக அவர் ஷேவாக் மற்றும் இந்திய அணி நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் மன்னிப்பு கேட்டது. மேலும் அவசரம் அவசரமாக ஒரு விசாரணையை அதுவாகவே நடத்தி ரந்தீவுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதித்தது.

இந்த நிலையில் ரந்தீவ் செய்ததும் கூட ஒரு வகையில் ஸ்பாட் பிக்ஸிங் போன்றதுதான். எனவே இலங்கை அணியும் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது ரசிகர்களிடம்.

ஷேவாக் சதத்தைத் தடுத்தால் இந்த 'ஆதாயம்' கிடைக்கும் என்று வெளியிலிருந்து யாரேனும் இலங்கைத் தரப்பை தூண்டி விட்டிருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+