தமிழகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருக்கும் 12 பேர்

சென்னையில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன், கோபி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்கள்.
மதுரையில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் செல்வம் என்பவருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். இந்த மனு நிலுவையில் உள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த அய்யாவு என்பவர் கோர்ட்டில் படுகொலை செய்யப்பட்டார். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன், சேக்மீரான், செல்வம் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருச்சி சிறையில் உள்ளனர். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் தற்போது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கிய அதிமுகவைச் சேர்ந்த நெடு என்கிற நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 12 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் கருணை மனு தாக்கல் செய்துல்ளனர். ஒருவர் கீழ்க்கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளார். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விரைவில் கருணை மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
தமிழகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நளினிக்கு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதேபோல சமீபத்தில், கோவையைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையும் குடியரசுத் தலைவரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications