போலீஸ் வாகனங்களில் டீசல் திருடிய போலீஸ்காரர் கூட்டாளியுடன் கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தில் உள்ள தனியார் பட்டறைக்கு ஆயுதப்படையைச் சேர்ந்த வேன்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அந்த வேன்களில் இருந்த டீசல் திருடப்படுவதாகவும் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் அஜித் குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த குறிப்பிட்ட பட்டறையை ரகசியமாக கண்காணிக்குமாறு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். போலீசாரும் அந்த பட்டறையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் புளூங்குடி ஆயுதப்படை முகாமைச் சேர்ந்த ஒரு வேன் அங்கு வந்தது. அப்போது ஆயுதப்படை முகாமில் போலீசாக பணிபுரியும் வேன் டிரைவர் பால், பட்டறை உரிமையாளர் அபூபக்கர் ஆகியோர் வேனில் இருந்து டீசலை திருடிக் கொண்டிருந்தனர்.
உடனே அங்கு சென்ற போலீசார் டிரைவர் பால் மற்றும் அபூபக்கரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 லிட்டர் டீசல் கைப்பற்றப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் ஆயுதப்படைக்கு சொந்தமான வேன்களில் டீசல் திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications