தமிழக காங். தலைவர் தங்கபாலு திடீர் டெல்லி பயணம்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு திடீரென இன்று டெல்லிக்குக் கிளம்பிச் சென்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் சோனியா காந்தி தேர்வு செய்யப்படவுள்ளார். அவரது பெயரை முன்மொழிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் டெல்லியில் குவிகிறார்கள். இதற்காகவே தங்கபாலு டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் கோஷ்டிப் பூசல் மூண்டுள்ளது. குறிப்பாக தங்கபாலுவைக் குறி வைத்து இளங்கோவன் கோஷ்டியினர் குதித்துள்ளனர். கடும் மோதல் மூண்டு வருகிறது. சமீபத்தில் கோவையைச் சேர்ந்த சில இளங்கோவன் ஆதரவாளர்களை தங்கபாலு சஸ்பெண்ட் செய்தார்.
இதனால் கொதிப்படைந்த அவர்கள் தங்கபாலு போகும் இடமெல்லாம் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளனர்.
இதுதவிர வாசன், இளங்கோவன் ஆகியோர், விஜயகாந்த்துடன் ஆலோசனை நடத்தியதும், விஜயகாந்த் பிறந்தநாளன்று அவரைப் போய் பார்த்து மாலை அணிவித்து விஜயகாந்த் ஒரு நல்ல தலைவர் என்று இளங்கோவன் பாராட்டியதும் காங்கிரஸுக்குள்ளேயே சில குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி கோஷ்டிப் பூசலும் தலை விரித்தாடுவதால் இதுகுறித்து மேலிடத்தில் தங்கபாலு புகார் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தங்கபாலுவின் டெல்லி பயணம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications