அமெரிக்க விமானத்தில் வந்த இருவர் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது
ஆம்ஸ்டர்டாம்: யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இருவரை தீவிரவாதிகளாக இருக்குமோ என்ற அச்சத்தில் நெதர்லாந்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிற்கு நேற்று முன்தினம் வந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சந்தேகத்திறகுரிய 2 பேர் பயணம் செய்வதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நெதர்லாந்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த விமானத்தில் வந்திறங்கிய எல்லா பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் நெதர்லாந்து போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது ஒருவரது பையில் ஒரு செல்போன், மருந்து பாட்டில், கத்திகள் மற்றும் கை கடிகாரங்கள் இருந்தது. மற்றொரு நபரின் பையில் துணிகளுக்கு இடையே 4 செல்போன்கள், மது பாட்டில், கைக்கடிகாரங்கள், பாக்ஸ் கட்டர், 3 பெரிய கத்திகள் ஆகியவை இருந்தன.
இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களது பெயர் அகமது மொகமத் நசீர் அல்ஷூபி, ஹெஷாம் அல்முரிசி என தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் ஆபத்தை விளைவிக்க கூடியவை என்பதால் இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதன் பிறகு இவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவர்களை இன்னும் சில நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இல்லையென்றால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications