அயோத்தி வழக்கு: ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்-ஆர்எஸ்எஸ்

Subscribe to Oneindia Tamil

Ram Madav
போபால்: அயோத்தி விவகார வழக்கில் ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராம் மாதவ் போபாலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஹிந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தாலும் கூட, ராமர் கோயில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

ஏனென்றால், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்றே தீர்ப்பு வந்தாலும் அதை அரசு அமல்படுத்தும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் மேல் முறையீடு செய்யக் கூடும்.

ஷாபானு வழக்கில் அந்தப் பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டபோதும், அரசு அதை அமல்படுத்தாமல் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது என்றார்.

முன்னதாக போபாலில் நடந்த கருத்தரங்கில் பேசிய அவர், நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு, மும்பை தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப் ஆகியோரது விவகாரங்களில் நீதிமன்றத் தீர்ப்பை அரசு அமல்படுத்தினால், அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை நாங்களும் ஏற்போம்.

ஆனால், நீதிமன்றங்களின் தீர்ப்பை அரசே மதிக்காதபோது, மற்றவர்கள் மதிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? ஷாபானு விவகாரம் போலவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+