சென்னை- நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு, கோவை வழியாக சிறப்பு ரயில் அக்டோபர் 13ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
மறுமார்க்கத்தில் மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 14ம் தேதி மாலை 5.25 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்ட்ரலில் இருந்த கொல்லத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் கோவை வழியாக அக்டோபர் 15ம் தேதி இரவு 8.35 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 17ம் தேதி காலை 11.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கு அதி விரைவு சிறப்பு ரயில் அக்டோபர் 13ம் தேதி இரவு 11.05 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் 14ம் தேதி கொல்லத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு அக்டோபர் 15ம் தேதி இரவு 11.05 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 17ம் தேதி மாலை 2.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (0607) அக்டோபர் 13ம் தேதி இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்(0608) 14ம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (0667) அக்டோபர் 17ம் தேதி மாலை 5 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு அக்டோபர் 18ம் தேதி மதியம் 2.40 மணிக்கு சிறப்பு ரயில் (0668) புறப்பட்டு செல்லும்.
சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு (எழும்பூர் வழியாக) சிறப்பு ரயில் அக்டோபர் 13ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 14ம் தேதி மதியம் 2.55 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு செல்லும்.
கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அக்டோபர் 12ம் தேதி இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு 13ம் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications