காமன்வெல்த் போட்டி-டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் பட்டாசுகளுக்குத் தடை-சிவகாசிக்குப் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

Sivakasi Cracker Industry
சிவகாசி: டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடக்கவிருப்பதால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பட்டாசுகளை இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியில் பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இம்மூன்று மாநிலங்களிலும் பட்டாசு இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து பட்டாசு ஆலை அதிபர் ஒருவர் கூறுகையில், டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ரூ.400 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்கப்படும். மத்திய அரசின் இந்த தடையால் விற்பனை வெகுவாக பாதித்துள்ளது.

இந்த ஆண்டு பட்டாசு தொழிலுக்கு அடுத்தடுத்து சோதனைகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் பட்டாசு ஆலைகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+