சோனியா தலைமையில்தான் காங். சிறப்பாக செயல்படுகிறது-கருணாநிதி

காங்கிரஸ் தலைவராக 4வது முறையாக தேர்வாகிறார் சோனியா காந்தி. இதையடுத்து சோனியாவுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதம்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4-வது முறையாக, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம், காங்கிரஸ் கட்சித் தேர்தலில் தாங்கள் ஒரு வரலாற்றை நிகழ்த்தியிருக்கிறீர்கள். சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னின்று போராடியதையும், ஈடுசெய்யமுடியாத பல்வேறு தியாகங்களையும் செய்துள்ளதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
தங்களது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி மிக சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறது. மக்களிடையே அதன் மதிப்பு மேன்மேலும் உயர்ந்து வருகிறது.
தேசத்தின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் பாடுபடுவதற்கும், ஏழைகளின் நலனுக்காக பாடுபடுவதற்கும் ஒரு உகந்த கருவியாக காங்கிரஸ் கட்சியை ஆக்கியிருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழக மக்களின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்காக மீண்டும் ஒருமுறை வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
1998 முதல் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார் சோனியா காந்தி. 125 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் அந்த பதவியில் இவ்வளவு அதிக காலம் இருப்பவர் சோனியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications