லஞ்சம் வாங்குவதைத் தடுத்த பெண் எஸ்.பி. யைத் தாக்கி 1.5 கிலோமீட்டர் இழுத்துச் சென்ற ஏட்டுகள்
பரேலி: உ.பி. மாநிலம் பரேலியில், பெண் எஸ்.பி. கல்பனா சக்சேனா என்பவர் தனக்கு கீழ் பணி புரிபவர்களால் தாக்கப்பட்டு, வாகனத்தில் தர தரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்தை சரிபார்க்கிறோம் என்ற பெயரில் பயணிகளை மிரட்டிப் பணம் வாங்குவதைத் தடுக்க முயன்றதால் அவருக்கு இந்த கோர நிலைமை. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.
கல்பனா சாக்சேனா தற்போது மருத்துவமனையில் உடைந்த கையுடனும், தலையில் காயத்துடனும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த சம்பம் குறித்து அவர் கூறியதாவது,
ஜாட் ரெஜிமென்டுக்கு அருகில் போக்குவரத்து ஏட்டுகள் டிரக் ஓட்டுநர்களை மிரட்டி லஞ்சம் வங்குவதாக ராணுவ வீரர் ஒருவர் எனக்கு நேற்று மாலை தகவல் கொடுத்தார்.
இதைக் கேட்டவுடன் துப்பாக்கி சுடுபவர் மற்றும் கார் ஓட்டுநருடனும் தனியார் காரில் அந்த இடத்திற்கு விரைந்தேன். அவர்களை கையும் களவுமாக பிடிக்க நினைத்தேன். அங்கு சென்றபோது பணியில் இருந்த ஏட்டுகள் லஞ்சம் வாங்குவதைப் பார்த்தேன். என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க நினைத்ததோடு, அவர்கள் வாகனத்தை வைத்து என்னை நசுக்கப் பார்த்தார்கள்.
அவர்களை பிடிக்க ஓடியபோது வாகன ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்து விட்டேன். ஆனாலும் வண்டியை நிறுத்தாமல் நடுத் தெருவில் சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக என்னை இழுத்துக்கொண்டே சென்றனர். இறுதியில் என்னை தெருவில் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டனர் என்று அவர் கூறினார்.
குற்றவாளிகளில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், மற்ற இருவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது,
நேற்று மாலை சக்சேனாவிற்கு காவலர்கள் லஞ்சம் வாங்குவதாக வந்தத் தகவலை அடுத்து அவர் துப்பாக்கி சுடுபவர், கார் ஓட்டுநருடன் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்த 3 ஏட்டுகளை விசாரித்ததில் தாங்கள் லஞ்சமே வாங்கவில்லை என்று மறுத்துள்ளனர். இதையடுத்து அவர் தனது உதவியாளரை விட்டு அந்த 3 பேரின் சட்டைப் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
வலையில் சிக்கிய அவர்கள் சக்சேனாவைத் தாக்கிவிட்டு அந்த இடத்தைவிட்டு ஓட முயன்றனர்.
அவர்கள் தப்பிக்கும் போது சக்சேனா ஒரு காவலரின் சட்டைக் காலரைப் பிடித்துள்ளார். அவர்கள் வண்டியை நிறுத்தாமல் சாக்சேனாவை இழுத்துக் கொணடே சென்றுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டி.ஐ.ஜி. என். கே. ஸ்ரீவாஸ்தவ் கூறியதாவது,
சம்பந்தப்பட்ட 3 பேரையும் தற்காலி பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கன்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவரான மனோஜ் குமாரை கைது செய்துள்ளோம். மற்ற 2 பேரையும் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications