பாஜகவின் ஆயுட்கால நன்கொடையாளர்கள் திட்டம்!: ரூ.1 லட்சம் கொடுத்து சேரலாம்!!

இதன்படி நாடு முழுவதும் கட்சிக்கு ஆயுட்கால நன்கொடையாளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ரூ.1 லட்சம் கொடுத்தால் கட்சியில் ஆயுட்கால நன்கொடையாளராக சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுமாம்.
ஏறேகனவே கட்சியில் ஆஜிவான் சகாயோக் நிதி என்ற நன்கொடையாளர்கள் திட்டமும் உள்ளது. அதன்படி கட்சித் தொண்டர்களும் ரூ.1,000, 5,000 மற்றும் ரூ.10,000 வருடாந்திர நிதியாக செலுத்தலாம். இப்போது ஆயுட்கால நன்கொடைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைவர் நிதின் கட்காரி வெளியிட்டுள்ள கட்சி நோட்டீசில் , அரசியலை சுத்தப்படுத்தவும், தூய்மையான அரசியல் பணிகள் நடக்கவும் கட்சி தொண்டர்களும், பொது நல விரும்பிகளும் இத் திட்டத்தில் கை கோர்க்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
காங். தலைவர் பதவி ஒரு குடும்பத்துக்கே சொந்தமா?:
இந் நிலையில் பாஜக முன்னாள் தலைவரான வெங்கைய நாயுடு நிருபர்களிடம் பேசுகையில், ஒரு கட்சி தனது தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்பது அக் கட்சியின் தனிப்பட்ட உரிமை.
ஆனால், காங்கிரசில் ஒரு குடும்பத்துக்கு மட்டும் கட்சித் தலைமைப் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதா?. இது தனிநபர் பற்றிய பிரச்சனை அல்ல.
பாஜகவில் அடுத்தடுத்து 2 முறை மட்டுமே தலைமைப் பதவி வகிக்கும் ஒரு சிறந்த மரபை வாஜ்பாய், அத்வானி போன்றோர் உருவாக்கியுள்ளனர். இதை காங்கிரஸ் பின்பற்றுமா என்றார்.
பாஜக செயற்குழு ஒத்திவைப்பு:
இதற்கிடையே ஜம்முவில் செப்டம்பர் 17ம் தேதி தொடங்க இருந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் அக்டோபரில் நடைபெறும் எனத் தெரிகிறது.
ராமஜென்ம பூமி தொடர்பான தீர்ப்பு இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications