வெளிநாடு செல்ல முயன்ற 54 இலங்கைத் தமிழர்கள் குற்றாலத்தில் கைது
நெல்லை: இலங்கையிலிருந்து கேரளா வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 54 இலங்கைத் தமிழர்கள் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் போர் முடிவடைந்ததை தொடர்ந்து அங்குள்ள தமிழர்கள் வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில் கேரளாவுக்கு வந்த இலங்கை தமிழர்களை கேரள கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்ததும், அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முற்பட்டோரை கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தேவர் லாட்ஜ் மற்றும் சிவானந்தா லாட்ஜில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். 54 பேரும் சென்னையில் இருந்து பேருந்தில் குற்றாலத்திற்கு வந்ததாகவும், இங்கிருந்து கேரளா வழியாக வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் முறையான அனுமதியோடு வந்தார்களா, அல்லது தமிழக முகாம்களில் இருந்து வந்தார்களா, என்பது தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கர்க் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இவர்களை சென்னையிலிருந்து அழைத்து வந்த பேருந்து மீண்டும் சென்னை திரும்பி விட்டதால் ஆள் கடத்தல் சந்தேகம் போலீஸாருக்கு வலுத்துள்ளது. குற்றாலம் போலீஸாருடன், கியூ பிரிவு போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications