ரஜினி வீட்டு திருமணம்: வரவேற்புக்கும் வராத ஜெயலலிதா!
நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணத்தின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தவர் ஜெயலலிதா. அன்றைக்கு அவர் தமிழக முதல்வராக இருந்தார். ஆனால் அந்த திருமண வரவேற்பில் கருணாநிதியும் பங்கேற்று வாழ்த்தினார்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த தனது இளைய மகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு குடும்பத்துடன் ரஜினியே நேரில் போய் ஜெயலலிதாவை அழைத்தார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை. ஆனால் ரஜினி நேரில் அழைக்காத போதும் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வரின் குடும்பத்தினர் வந்திருந்து வாழ்த்தினர்.
அடுத்து திருமணத்துக்கு வருமாறு ரஜினியும் அவர் மனைவி லதாவும் சில தினங்களுக்கு முன் ஜெயலலிதாவின் வீட்டுக்குப் போய் அழைப்பிதழ் வைத்தனர். இதனை தனி செய்திக் குறிப்பாக அதிமுக அலுவலகம் பத்திரிகைகளுக்குக் கொடுத்தது.
ஆனால் மாப்பிள்ளை அழைப்பு, முகூர்த்தம், வரவேற்பு என எந்த நிகழ்விலும் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. இந்த நேரமாகப் பார்த்து கொடநாட்டுக்குப் போய்விட்டார்.
ரஜினி நேரில் போய் அழைத்த பெரும்பாலான அரசியல், சினிமா மற்றும் தொழில்துறைப் பிரபலங்கள் திருமணத்துக்கு வந்திருந்து வாழ்த்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியாவுடன் வந்து வாழ்த்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications