வீரேந்திர ஷேவாக்கின் 72 வயது உறவினர் டெல்லியில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கிரிக்கெட்வீரர் ஷேவாக்கின் 72 வயதான உறவினர் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் பகத் சிங். இவர் தென்மேற்கு டெல்லியில் வசித்து வந்தார்.
இன்றுகாலை அவர் பிணமாகக் கிடந்தார். போலீஸார் வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பகத் சிங் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் பகத் சிங். உடல் நலக் குறைவைத் தாங்க முடியாமல்அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
பகத் சிங்கின் உடல் ராவ் துலா ராம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications