ராகுல் காந்தியை 'பிராண்ட் அம்பாசடராக்க' முயலும் கிரிக்கெட் வாரியம்!
Subscribe to Oneindia Tamil

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தவுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் போட்டி தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கான விழிப்புணர்வுப் பிரசாரத்தை நடத்தவுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இதில் பங்கேற்குமாறு கோரி ராகுல் காந்திக்கு அது அழைப்பு விடுத்துள்ளது.
இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் அவரை அழைத்து வந்தால் நல்ல பிரசாரமாக அமையும், நிறைய விளம்பரம் கிடைக்கும், வருவாய் அதிகரிக்கும் என்பது கிரிக்கெட் வாரியம் மற்றும் உலகக் கோப்பைப் போட்டியின் விளம்பர ஸ்பான்சர் ஆகியோரின் கருத்தாகும்.
ஆனால் இதுவரை ராகுல் காந்தி இந்த கடிதத்திற்குப் பதில் அனுப்பவில்லையாம்.












Click it and Unblock the Notifications