ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல்-5 பேர் பலி, 39 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவின் வடக்கு காகாசஸ் பகுதியில் உள்ள தகேஸ்தானில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் தற்கொலைப்படை கார் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் பலியாகினர். 39 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

தகேஸ்தானில் உள்ள புய்நஸ்க் நகருக்கு அருகில் உள்ள ராணுவ முகாமில் இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

வெடிகுண்டுகள் அடங்கிய லாடா கார் 136-வது காலாட்படை இருக்கும் முகாம் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தது. இதில் ராணுவ வாகனம் ஒன்றும், வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த கூடாரங்களும் தீப்பிடித்து எரிந்தன என்று ரோசியா 24 தொலைக்காட்சி சேனல் கூறியுள்ளது.

இந்த தாக்குதலில் 5 பேர் உயிர் இழந்தனர். மேலும், 39 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் பெரும்பாலோரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+