பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம்-காந்தி பேரன்

ராஜ்மோகன் காந்தி இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் தெற்கு ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் பாடப்பிரிவு விரிவுரையாளராக உள்ளார்.
ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரத் தூதர் அப்துல்லா ஹூசைனை ராஜ்மோகன் காந்தி சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இரு நாடுகளிடையே இப்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழலை அரசியல் ஆதாயமாக்கிக் கொள்ள வேண்டும். கடந்த கால நிகழ்வுகளை இருதரப்பினரும் மறந்துவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்க முன்வரவேண்டும்.
பெருவெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் இந்தியா முதல் கட்டமாக 50 லட்சம் டாலர் (ரூ. 23 கோடி) அளிப்பதாக உறுதியளித்தது. பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கூடுதலாக 20 லட்சம் டாலர் (ரூ. 92 கோடி) அளிப்பதாக இந்தியா அறிவித்தது. உதவித் தொகை முழுவதும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படுகிறது. இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அளிக்க முன்வந்துள்ள உதவியை ஏற்கும் அதேநேரத்தில் பழைய விவகாரங்களை மறந்து பேச்சு நடத்தவேண்டும் என்று அவர் கூறினார். இந்த சந்தர்ப்பத்தை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானில் சமீபத்தில் பெய்த மழையில் நாட்டின் மொத்த பரப்பளவில் ஐந்தில் ஒரு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 1,400 பேர் உயிரிழந்தனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரு வெள்ளத்தை சமாளிக்க ஐக்கிய நாடுகள் சபை 46 கோடி டாலர் தேவைப்படும் என அறிவித்தது. உடனடியாக பல்வேறு நாடுகள் அளித்த நிதி 29 கோடி டாலரை எட்டியது.
இப்போது ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக அங்கு மறுவாழ்வுப் பணிகள் தொடங்கி, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப வெகு நாள்களாகும். கட்டமமைப்பு வசதிகளை ஏற்படுத்த பல ஆண்டுகள் ஆகும். பாகிஸ்தனுக்கு இந்தியா மேலும் உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உதவி செய்யும் அதே நேரத்தில் பேச்சுவார்தையையும் நடத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் பலன் ஏற்படும் என்றார் ராஜ்மோகன் காந்தி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications