அன்னை தெரசாவின் சேவையை கௌரவித்து தபால்தலை வெளியிட்ட அமெரிக்கா
வாஷிங்டன்: கிட்டத்தட்ட 50 வருடங்களாக ஏழை, எளிய மக்களுக்கு அன்னை தெரசா ஆற்றிய சேவையை பாராட்டி அவரை கௌரவிக்கும் வகையில் அமெரிக்கா தபால் தலை வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்புத் தபால் தலையை அமெரிக்க தபால் சேவைத் துறை நேற்று தலைநகர் வாஷிங்டனில் வெளியிட்டது.
44 சென்ட் மதிப்புள்ள இதில் 1979-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் படம் உள்ளது. இந்த படத்தை கொலரடோ ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த விருது பெற்ற ஓவியர் இரண்டாம் தாமஸ் பிளாக்ஷீர் வரைந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பிளாக்ஷீரும் கலந்து கொண்டார்.
அன்னை தெரசா 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கொல்கத்தாவில் இறந்தார். அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு தான் அவருக்கு கௌரவ அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது.
சுமார் 50 ஆண்டு காலம் இந்தியாவில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் அயராது சேவை புரிந்தவர் அன்னை தெரசா.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications