சூடான் அகதிகள் முகாமில் நடந்த கலவரத்தில் 43 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்
கெய்ரோ: ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் நேற்றிரவு வெடித்த கலவரத்தில் 43 பேர் உயிர் இழந்தனர், 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த 2003-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள தார்பரில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரைத் வெறித்தனமாகத் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக இறந்தனர். ஏராளமான வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்து எரிக்கப்பட்டும் சேதமடைந்தன. இதனால் 27 லட்சம் பேர் இருக்க இடமின்றித் தவித்தனர்.
ஒதுங்க இடமின்றி தெருவில் நின்றவர்களுக்காக சூடானின் மேற்கு பகுதிகளில் பல அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில் பல லட்சம் பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு இடையில் அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமாகி விட்டது. இதனால் தாக்குதல் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று மேற்கு தார்பரில் உள்ள ஹமிதியா முகாமில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. இதில் இரு பிரிவினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். விடிய விடிய நடந்த இந்த கலவரத்தில் சுமார் 43 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து சூடான் நாட்டு ராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரத்தை அடக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications