மாணவி ஜோதி தற்கொலை-அண்ணா பல்கலை.மாணவர்களிடம் போலீஸ் விசாரணை
சென்னை: ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி ஜோதி வழக்கில், அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மகள் ஜோதி (18). நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற்றதால் இவருக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பிஇ இ.சி.இ. படிப்பு கிடைத்தது. இதையடுத்து சேர்ந்து படித்து வந்தார்.
கடந்த 31 மற்றும் 1 தேதிகளில் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சில மாணவர்கள் தன்னை கேலியும் கிண்டலும் செய்வதாகவும் எனவே இனிமேல் நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க செல்ல மாட்டேன் என்று கூறியதாகவும் அவரை அவரது அண்ணன் தீபக் சமாதானப்படுத்தியும் மனம் வெந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஆங்கிலம் பேசத் தெரியாததால் தனது தங்கையா ராகிங் செய்துள்ளனர். இதனால்தான் அவர் இறந்து விட்டார் என்று தீபக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் சென்னை வந்து அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில்,
மாணவி ஜோதி இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த சேலத்தில் இருந்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் வந்து இருந்தனர். சென்னையில் இருந்தும் ஒரு போலீஸ்காரர் வந்து இருந்தார்.
இவர்கள் என்னிடம் வந்து சில விவரங்களை கேட்டறிந்தனர். என்னுடன் கிண்டி என்ஜீனீயரிங் கல்லூரி டீன் மற்றும் விடுதி வார்டன், இருப்பிட கவுன்சிலர் ஆகியோர் இருந்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரித்தனர்.
பின்னர் மாணவி ஜோதி தங்கி இருந்த விடுதி அறைக்கு சென்று பார்வையிட்டனர். ஜோதியின் புத்தகங்கள், மற்றும் உடமைகளை பார்த்தனர். ஜோதியின் அறையில் உள்ள மாணவிகளிடம் விசாரித்தனர். அதைத்தொடர்ந்து ஜோதி படித்த வகுப்பறைக்கு சென்று அவர் அருகில் அமர்ந்து இருக்கக்கூடிய மாணவிகள் மாணவர்கள் ஆகியோரிடம் விசாரித்தனர். மொத்தத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடந்தது.
அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் ராக்கிங் நடந்திருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டால் அவர்களின் படிப்பு அவ்வளவுதான் என்று எச்சரிக்கை செய்துள்ளோம் என்றார்.
மாணவி ஜோதியின் செல்போன் உரையாடல்களையும் போலீஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். அவருடன் கடைசியாக பேசியது யார் என்பதை அறிய போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ராகிங் காரணமாக தற்கொலையா அல்லது காதல் விவகாரம் அல்லது குடும்பப் பிரச்சினை காரணமாகவா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications