ரூ.100 கோடியில் 2 புதிய ஆலைகள் அமைக்கும் பிரிட்டானியா

இந்த ஆலைகள் பிகார் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து பிரிட்டானியா நிறுவன தலைவர் வினிதா பாலி கூறுகையில், ஒரிஸ்ஸாவில் கட்டாக் அல்லது புவனேஸ்வரில் இந்த ஆலை அமையும். இதன்மூலம் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பிகாரில் அமையும் ஆலை ரூ. 45 கோடி முதலீட்டில் அமைக்கப்படும். 10 ஏக்கர் முதல் 12 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஆலை 1,000 டன் பிஸ்கெட் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஏற்கெனவே பிகாரில் மயூர்கஞ்ச் பகுதியில் பிரிட்டானியாவுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் பிஸ்கெட் தயாரிக்கும் ஆலை உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்நிறுவனமே நேரடியாக புதிய ஆலை அமைக்க உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டானியாவின் பிஸ்கெட் விற்பனை 18 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2005ம் ஆண்டில் பிரிட்டானியா நிறுவன வருமானம் ரூ.1,600 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இது ரூ.3,800 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், பிஸ்கெட் தயாரிப்பதற்கான கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை உயர்வாலும், பிஸ்கெட் விலையை உயர்த்தாதலும் லாபம் குறைந்துவிட்டது என்றார்.
இந்தியாவில் மொத்த பிஸ்கெட் விற்பனையில் 31 சதவீதம் பிரிட்டானியா நிறுவனத்தின் தயாரிப்புகள் தான்.
ரூ.10,000 கோடி மதிப்புள்ள இந்திய சந்தையில் பார்லே நிறுவன தயாரிப்புகள் தான் முதலிடத்தில் உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications