கரூரில் போலீஸ் அதிகாரி மகள் உள்பட 2 மாணவிகள் பள்ளியிலிருந்து கடத்த முயற்சி
கரூர்: கரூரில் தனியார் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகளை பள்ளி வாளாகத்தில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் புகழ் பெற்ற பள்ளியான பரணி பார்க் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8 ம் வகுப்பு டி கிளாஸ்-ல் படிக்கும் மாணவி சிந்து, அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவி அகன்யா ஆகியோர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல பள்ளி வாகத்திற்காக காத்திருந்தனர்.
அப்போது, அங்கு காரில் வந்த ஒரு கும்பல் பள்ளி மாணவிகளை நைசாக பேசி காரில் ஏற்றுச் சென்றுள்ளது. காரில் கடத்தப்படுவதை அறிந்த குழந்தைகள் சத்தம் போடவே அந்த கும்பல் மாணவிகளை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளது.
இதனையடுத்து, அந்த வழியே வந்தவர்களிடம் விஷயத்தை கூறி தங்களது பெற்றோர்களுக்கு செல் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.
இதை அறிந்து பதறித்துடித்த பெற்றோர்கள் கரூர் - சேலம் பைபாஸ்-ல் குழந்தைகள் இருப்பதை அறிந்து அங்கு சென்று மீட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிச் செல்ல பள்ளி வாகனம் வந்த போது ஆண்டாங்கோவில் அருகே அந்த வேனை பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் மறித்து சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் மாணவி அகன்யாவின் தந்தை போலீஸ் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications