கேரளம், தமிழகத்தில் கடல் வழி தாக்குதலுக்கு 'லஷ்கர்-எ-தொய்பா' திட்டம்!
திருவனந்தபுரம்: கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தானின் லஷ்கர்-எ-தொய்பா தீவிரவாத அமைப்பு கடல் வழியே தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை
நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தானின் லஷ்கர்-எ-தொய்பா தீவிரவாத அமைப்பு கடல் வழியாக இந்தியாவில் கடலோர மாநிலங்களின் முக்கிய நகரங்களை தாக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக தனது கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருவதை நமது உளவுத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.
எனவே இந்த மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில் போலீஸ் படைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம்.
கேரளாவில் பேராசிரியரின் கையை இந்திய மக்கள் முன்னணி தொண்டர்கள் வெட்டியது தொடர்பாக தேசிய அளவில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி பரிசீலித்து வருகிறோம்.
கேரளாவுக்கு எதிர்காலத்தில் மத தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதுகிறோம் என்றார் பிள்ளை.
வயநாடு வனப் பகுதிகளில் நக்ஸல்களின் ஆதிக்கம் பரவி வருவது குறித்தும், அதை தடுப்பது குறித்தும் கேரள காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனைகளி்ல் பிள்ளை ஈடுபட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications