ராஜபாளையம் அதிமுக எம்எல்ஏ வெற்றி செல்லும்-சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ராஜபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திராவின் வெற்றி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தனி தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் வி.பி.ராஜன் 57,827 வாக்குகள் பெற்றார்.
தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த தங்கமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், சந்திரா தலித் கிறிஸ்தவர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் தன்னை இந்து வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்திரா போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தனது மதத்தையும், படிப்பையும் மாற்றிக் கொடுத்திருப்பதாகக் கூறி அவரது வெற்றி செல்லாது என்று அறிவித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சந்திரா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிமனறம், சந்திராவின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக் காலத் தடை விதித்தனர். இதையடுத்து வழக்கு தொடர்ந்து நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பி்ல், சந்திரா வெற்றி பெற்றது செல்லும் என்று அறிவித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தனர்.
இதையடுத்து ராஜபாளையத்தில் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications