சென்னை-எஸ்.ஐ. வீட்டில் 42 பவுன் தங்க நகைகள் திருட்டு
சென்னை: சென்னையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்த திருடர்கள் 42 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். மேலும் சென்னையில் ஒரே நாளில் 6 இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் மகாதேவன். புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பீரோ சாவி 20 நாட்களுக்கு முன்பு தொலைந்து போனது. நேற்று புதுசாவி வாங்கிய மகாதேவன் பீரோவை திறந்து பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த 42 பவுன் நகையை காணவில்லை. இது குறித்து மகாதேவன் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்தடுத்து 6 திருட்டு:
டெல்லியில் ரயில்வே லஞ்ச ஒழிப்பு துறையில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் ஜி.வி. ரெட்டி. இவர் தனது மனைவி ஜோதியுடன் சென்னை வந்தார். இருவரும் ஐ.சி.எப். விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தனர். வெளியில் சென்றுவிட்டு நேற்று இரவு 11.30 மணியளவில் இருவரும் அறைக்கு திரும்பினர்.
2-வது மாடிக்கு சென்று கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் திடீரென ஜோதியின் மீது பாய்ந்து கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றார்.
இது குறித்து ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐ.சி.எப். விருந்தினர் மாளிகையில் வெளியாட்கள் யாரும் எளிதில் நுழைந்து விட முடியாது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இதை மீறி கொள்ளையன் உள்ளே புகுந்தது மர்மமாக உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பியூட்டி பார்லரில் ரூ. 50,000 பணம் திருட்டு:
மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் வணிக வளாகம் ஒன்றில் பிரசன்னா என்பவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்று உள்ளனர்.
இதேபோல கொளத்தூரில் வினோஜ் என்பவர் வீட்டில் செல்போன் மற்றும் சில்வர் பாத்திரங்களும் அமைந்தகரையில் ரமேஷ் என்பவர் வீட்டில் 2 பவுன் நகையும் திருட்டு போய் உள்ளது. அடையாறில் ராஜேஸ்வரி என்பவரது வீட்டில் 9 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் 6 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications