கடையநல்லூர் பெரியார் சிலையை உடைத்த 4 பேர் கைது
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையநல்லூர் அருகே மங்களாபுரம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை கடந்த 1-ம் தேதி சில விஷமிகளால் உடைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியி்ல் இருந்த காங்கிரஸ் கொடிக் கம்பமும் சேதப்படுத்தப்பட்டது. அவ்வழியே சென்ற அரசு பஸ் மீதும் கல் வீசி தாக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துரித விசாரணை நடத்த எஸ்.பி. ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.
சங்கரன்கோவில் டி.எஸ்.பி. தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மங்களாபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரிசெல்வம், சுப்பையா பாண்டியன் மகன் கனகராஜ், மற்றொரு சுப்பையா மகன் ராசய்யா, தங்கையா மகன் பூமாரி ஆகிய 4 பேர் நேற்று தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் மதுரை பெருங்குடி அருகே சின்னஉடைப்பு பகுதியில் அமைத்திருந்த இம்மானுவேல் சேகரன் சிலையை கடந்த 31-ம் தேதி சில விஷமிகள் சேதப்படுத்தியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரியார் சிலையை சேதப்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இக்கும்பலுக்கு மங்களாபுரம் செல்லப்பா மகன் ஆனந்த் என்பவர் தலைவராக இருந்து செயல்பட்டுள்ளார். இவர் மலையடிக்குறிச்சி பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஆசிரியர் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications