நீண்ட நாள் நண்பருக்கு உதவிக் கரம் நீட்டிய மு.க. ஸ்டாலின்
ஈரோடு: நண்பரும், முன்னாள் திமுக இளைஞரணி மாநிலத் துணை அமைப்பாளருமான எவரெஸ்ட் கணேசனுக்கு மு.க. ஸ்டாலின் மருத்துவ உதவி செய்து பேருதவி புரிந்துள்ளாராம்.
மு.க. ஸ்டாலின், திருச்சி அன்பில் பொய்யாமொழி, ஈரோடு எவரெஸ்ட் கணேசன் ஆகயோர் ஒரு காலத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.
இதில் அன்பில் பொய்யாமொழி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் முன்னாள் நண்பரும், முன்னாள் திமுக இளைஞரணி மாநிலத் துணை அமைப்பாளருமான எவரெஸ்ட் கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் செயல் இழந்தது. ஆனால் அதற்கு சிகிச்சை செய்யும் அளவுக்கு அவரிடம் பண வசதி இல்லை.
இதை அறிந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தானே முன் வந்து, எவரெஸ்ட் கணேசனுக்கு கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.
மேலும், எவரெஸ்ட் கணேசனுக்கு தேவைப்படும் பண உதவியை அளிக்குமாறும் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் ஆகியோருக்கு உததரவிட்டார்.
இதனையடுத்து எவரெஸ்ட் கணேசன் உடல் நலம் தேறி நலமுடன் உள்ளதாக கூறப்படுகின்றது.
நண்பனுக்கு ஓடி வந்து உதவிய துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த நவடிக்கை அவரது நண்பர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications