'பாரத் தீர்த்': இமயம் முதல் குமரி வரை 16 ஆன்மீக ரயில்கள்-அக். முதல் இயக்கம்

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில், மதுரை, கன்னியாகுமரிக்கு இந்த ரயில்கள் வருகின்றன.
இதுபற்றி டெல்லியில் ரயில்வே அமைச்சம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, ஆன்மீக சுற்றுலா பயணிகள் அதிகம் அலைய தேவையின்றி ரயில் மூலம் அதிக தலங்களை பார்க்க வசதியாக ரயில்களை பாரத் தீர்த் என்ற பெயரில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஆன்மீக சுற்றுலாவை அதிகரிப்பது மட்டுமின்றி நம் நாட்டின் கலாச்சார ஓற்றுமையை அதிகரிக்கவும் உதவும். ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இந்த ரயில் சேவை அக்டோபரில் அறிமுகமாகின்றன.
இமயமலை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு ஆன்மீக தலங்கள், சுற்றுலா மையங்களை இந்த ரயில் இணைக்கும் வகையில் ஓடும். துவாரகா முதல் விந்தியா பர்வதம் வரையும், அஜ்மீர் முதல் கங்காசாகர் வரையும் மதுரை முதல் பீட்னா வரையும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும் இந்த ரயி்ல்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications